விநாயகர் அருளால் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும் – பிரதமர் மோடி வாழ்த்து!

விநாயகர் பெருமானின் அவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வீடுகள் மற்றும் கோவில்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள பதிவில்,

எனது சக குடிமக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தடைகளை நீக்குபவரான விநாயகப் பெருமானை தரிசித்து வழிபடும் இந்தப் புனிதத் திருநாள், அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் நிறைவாக வழங்கட்டும். அவரின் தெய்வீக அருளால் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும். நமது நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. கணபதி பாப்பா மோரியா!

மோதகத்தை விரும்பி ஏற்றுக்கொள்பவரே, முக்தியை நாடுபவரே,
தம் திருமுடியில் பிறைச் சந்திரனை அணிந்தவரே, விளையாடும் கண்களையுடையவரைக் காப்பவரே,
ஒப்பற்ற ஒரே பரம்பொருளே, கொடிய அரக்கர்களை அழிப்பவரே,
தம் பக்தர்களின் அனைத்து துன்பங்களையும் நீக்குபவரே — அந்த விநாயகப் பெருமானை நான் வணங்குகிறேன், எனத் தெரிவித்துள்ளார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *