உழைக்கும் மக்களின் பொழுதைத் திருடக் கூடாது : அன்புமணி ராமதாஸ் அதிரடி..!

பொழுதுபோக்கு என்பது போகாத பொழுதைக் கடத்துவதற்கானதாக இருக்க வேண்டும், மாறாக உழைக்கும் மக்களின் பொழுதைத் திருடுவதாக இருக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி  தெரிவித்துள்ளார்.

அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு, வெளியீட்டு நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு நாள்தோறும் 6 காட்சிகளைத் திரையிடுவதற்கு அனுமதி அளித்துத் தமிழக அரசு ஆணையிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களின் உழைப்பையும், உற்பத்தித் திறனையும் ஊக்குவித்து முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதற்குப் பதிலாக ஒரு நாளைக்கு 20 மணி நேரம் திரையரங்குகளில் முடக்கி வைப்பது மிகவும் பிற்போக்குத் தனமானதாகும் என்று கூறியுள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்களும், திரையரங்க உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்தார்கள் என்பதற்காக அதன் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அதிகாலை 6 மணிக்குத் தொடங்கி 6 காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

உழைப்பையும், உற்பத்தித் திறனையும் கெடுக்கும் ஒரு நாளைக்கு 6 காட்சிகள் நடத்த அனுமதி வழங்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *