இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் விற்பனை – அமைச்சர் பெரிய கருப்பன்!

இன்று காலைச் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்புத் தொகுப்புகள் விற்பனையை வாடிக்கையாளருக்கு வழங்கி அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

கூட்டுறவு அங்காடிகளில் பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப் பருப்பு என ஏழு பொருட்களைக் கொண்ட இனிப்பு பொங்கல் தொகுப்பு ரூ.199 விற்பனை செய்யப்படுகிறது.

மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப் பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் என 19 பொருட்களைக் கொண்ட து கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பையென 35 பொருட்களைக் கொண்ட பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *