கோவையில் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நாடளுமன்ற உறுப்பினர் நரேஷ் பன்சால் தலைமையில் ஒருநாள் தேர்தல் பயிலரங்கம் நடைபெற்றது
கோவையில் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட பொருளாளர்களுக்கான ஒருநாள் தேர்தல் பயிலரங்கம் நடைபெற்றது. இதில், நாடளுமன்ற உறுப்பினர் நரேஷ் பன்சால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தேர்தல் காலத்தில் நிதி மேலாண்மை செய்வது எப்படி, தேர்தல் செலவின கணக்குகளைத் திட்டமிட்டு பராமரிப்பது, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் விரிவாக விளக்கம் அளித்தார். தொடர்ந்து, தேர்தலை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு, அமைப்பு வலுப்படுத்தல், குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக பொருளாளர் சேகர், இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம், கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

