Fake Documents Fraud: மூதாட்டியின் சொத்துக்கள் அபகரிப்பு!

Advertisements

கண் தெரியாத மூதாட்டியின் சொத்துக்களை படப்பை சார் பதிவாளர்  அலுவலகத்தில் நடந்த பத்திரப்பதிவில் போலி ஆவணங்கள்மூலம் அபகரித்தது மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.இடத்தை மீட்டு தரக் கோரி குடும்பத்துடன் மூதாட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம்நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த 80வயதான மூதாட்டி கீதா சீதாம்மாள். இவரின் தந்தையின் பூர்வீக சொத்தான 56 சென்ட் இடத்தைக் கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி வேறொரு நபருக்குக் கீதா சீதாம்மாள் விற்பனை செய்துள்ளார்.

இந்தநிலையில் கீதா சீதாம்மாவின் போலீ கையெழுத்தைட்டு அதே மாதம் நவம்பர் 15ம் தேதி கீதா சிதாம்மாள் விற்பனை செய்வதுபோல் வேறு ஒருவருக்கு கிரய பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே சொத்தை ஒரே மாதத்தில் இருவருக்கு கிரயபத்திரம் செய்து ஸ்ரீபெரும்புதூர் சர்பாதிவாளர் அலுவலகத்தில் மோசடி நடைப்பெற்றுள்ளது.

இந்தநிலையில் முதலில் இடத்தை வாங்கிய நபர் சீதாம்மாளிடம் பணத்தை திரும் கேட்டும்போது தான் தன்னுடைய நிலத்தை மோசடியாக வேறு ஒருவருக்கு மாற்றியது தெரியவந்ததுள்ளது.

அதேபோல் கீதா சீதாம்மாளின்சித்தப்பா சுப்பிரமணியன், ராமதாஸ் ஆகியோரின் சொத்துகளை முறைகேடாகப் பத்திரவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்து முறைகேடுகளையும் கீதா சீத்தாம்மளின் பெரியப்பா மகன்கள் கண்ணன், ஜெகநாதன் ஆகியோர் தான் போலீயாக ஆவணங்களைத் தயாரித்து தங்களது பெயரில் சொத்தை மாற்றியது தெரிய வந்தது.

இதனையடுத்து இது தொடர்பாகக் கீதா சீத்தாம்மள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு 3 முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கதால் இன்று காலைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகன், மகள், பேரன் பேத்திகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சி தலைவரிடம் அழைத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சி தலைபவரிடம் 4 வது முறையாகப் புகார் மனு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவார் அலுவலர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

முதாட்டியின் வாரிசுதாரர் அல்லாத ஒன்று விட்ட பங்காளிகளின் மகன்கள் மோசடியாகச் சொத்த அபகரித்ததும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள்மீதும் கடும் நவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டோர் பேட்டி அளித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *