BJP K. Annamalai: ஓட்டுக்குப் பணம் கொடுத்தேனா? அண்ணாமலை விளக்கம்!

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுக்க சூடுபிடிக்க துவங்கிவிட்டது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவங்கி ஒட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தனக்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு மறைமுகமாகப் பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வைரல் வீடியோவின் உண்மை தன்மைகுறித்து ஆய்வு செய்யக் காவல் துறைக்குத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், வைரல் வீடியோ தொடர்பாகப் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அதில், “கோவை ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட்ட ஆதாரங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்கு பதில், கடந்த ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின்போது எடுக்கப்பட்ட வீடியோவுக்குப் பதில் அளிக்க முடிவு செய்துள்ளார்.”

“ஆரத்தி எடுப்பவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாக வெகுமதி அளிப்பது நம் கலாச்சாரம். இந்த வழக்கத்தை நாங்கள் தேர்தல்களில் பின்பற்றுவது கிடையாது. மற்றவர்களைப் போன்று ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை நாங்கள் நம்பவில்லையென ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம்.”

“இன்று பொய் பிரசாரம் செய்யும் கட்சிகளால் உண்மையான பணப் பரிமாற்றம் நடக்கும்போது கோவை ஆட்சியர் கவனமுடன் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின்போது எடுக்கப்பட்ட வீடியோவுக்குப் பதில் அளிக்க முடிவு செய்துள்ளார்.”மற்றவர்களைப் போன்று ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை நாங்கள் நம்பவில்லையென ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *