
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் உலகநாயகன் கமலஹாசனையும் பின்னுக்கு தள்ளிய தமிழகம் தளபதி விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்து விடுமா? என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதா?
இதோ உங்கள் ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி இது
தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்று கணக்கெடுத்து பார்த்தால் நடிகர் திலகம் முதல் அது ஒரு நீண்ட பட்டியல். இந்த பட்டியலில் மகத்தான வெற்றி பெற்ற ஒரே ஒருவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டுமே. இவருக்கு அடுத்தபடியாக அவரது வாரிசாக வெற்றி பெற்றவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதித்து இருக்கிறார்.
இவரது வருகை தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மறுக்க முடியாத செய்தியாகும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இன்னும் அவர் தேர்தல் பிரச்சார களத்தில் இறங்காத நிலையில் இப்பொழுதே எதிர்பார்ப்பு எகிரி இருக்கிறது.இந்த நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கும் பொழுது இது பல மடங்கு பெரிதாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் . அதே சமயம் கூட்டணி போடாமல் விஜயால் வெற்றி பெற முடியுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறியாகும்
காரணம் தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக அதிமுக என இரண்டு பலம் கொண்ட கட்சிகள் இருக்கின்றன இது மட்டுமல்லாமல் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாம் தமிழர் கட்சி கம்யூனிஸ்டுகள் என ஏராளமான முன்னணி அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் மிகப்பெரிய வாக்கு வங்கிகளை தங்களுக்கென வைத்திருக்கிறார்கள்.
திமுக அதிமுக என்ற இரண்டு பெரிய கட்சிகளே கூட்டணி போட்டு தான் தேர்தலை சந்திக்க வேண்டி இருக்கிறது என்ற நிலை இருக்கும்பொழுது இவர்களுடன் மோதி வெற்றி பெறுவது அத்தனை சுலபமான விஷயம் அல்ல என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதேசமயம் இவர்கள் யாருடனும் விஜய் கூட்டணி போட மாட்டார் என்றும் அடித்து சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
காரணம் தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் விஜய் தான் முதலமைச்சர் என்பது முன்னெடுப்பாக இருக்கிறது அதே சமயம் கூட்டணி சேரும் பொழுது விஜய்க்கு முதலமைச்சர் பதவி இல்லை என்பதும் உறுதியான ஒரு தகவலாகும் அதாவது கூட்டணி சேர்ந்தால் அவர் துணை முதலமைச்சர் பதவியை வேண்டுமானால் பெறலாம் என்ற நிலை இருக்கிறது எனவே அவர் யாருடனும் கூட்டணி சேர மாட்டார் என்பது முக்கிய கணிப்பாக இருக்கிறது
அதாவது கட்சி தொடங்குவது எளிது அதே சமயம் சாதுரியமான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும் இல்லை என்றால் தோல்வி தான் கிடைக்கும் இதில் நாம் மட்டுமல்ல நம்மை நம்பி வந்த கட்சியினருக்கும் பதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களும் சோர்வடைந்து விடுவார்கள் எனவே தாங்கள் இது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் . ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் சிரஞ்சீவி தனிக் கட்சி தொடங்கினார் போகும் இடமெல்லாம் தொண்டர்கள் குவிந்தார்கள் ஆனால் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் கட்சியை நடத்த முடியாமல் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விட்டார்
இதேபோல் தெலுங்குதேசம் கட்சி மிகச் சரியாகத் திட்டமிட்டு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்த பிறகு மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது எனவே தமிழகத்தில் நீங்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் கூட்டணி சேர வேண்டும் என ஆலோசனை சொல்லப்பட்டு இருக்கிறது .உங்களைப் பொறுத்தவரையில் தேர்தல் பிரச்சாரத்திலும் தேர்தல் காலத்திலும் நீங்கள் தனி ஆளாகத்தான் இறங்குகிறீர்கள் உங்களுக்கு பக்கபலமான பிரபலங்கள் யாரும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது என்பதையும் சற்று யோசனை செய்உள்ளனர் எனக் கூறி உள்ளனர்
இவை அனைத்தையும் காதுகளில் வாங்கிக் கொண்ட விஜய் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது . பவன் கல்யாண் மட்டுமல்ல பிரதமர் மோடியே வந்து பேசினாலும் எடப்பாடியே வந்து பேசினாலும் விஜய் ஒருபோதும் கூட்டணி போட்டு தேர்தலில் நிற்க மாட்டார் தனி ஆளாகத்தான் நிற்பார் என்று உறுதியாக அடித்து சொல்கிறார்கள் தமிழக வெற்றி கழகத்தினர்.
