சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கியதால் தங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை – ரங்கசாமி

Advertisements

பாஜகவுக்கு நியமனச் சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கியதால் தங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிப் பள்ளிக் கல்வித்துறையின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் சார்பாக வித்யா சமிக்‌ஷா கேந்திரா திட்டத்தைத் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தொடக்கி வைத்தார். முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கல்வித்துறைச் செயலர் பிரியதர்சினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமிக்சா கேந்திரா என்பது தேசியக் கல்விக் கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட தரவுத்தளக் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வுத் தளம் ஆகும். மாணவர்களின் வருகை, கல்வி முன்னேற்றம், ஆசிரியர் செயல்திறன் ஆகியவற்றைக் கண்காணித்து கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் எனக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நியமன உறுப்பினர் பதவியைப் பாஜகவினருக்குக் கொடுத்ததற்குத் தங்களுக்கு வருத்தமில்லை எனத் தெரிவித்தார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *