கார்ப்பரேட் கம்பெனிகளிடம் பாரதிய ஜனதாக் கட்சியை அடமானம் வைப்பு – நாராயணசாமி

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளிடம் பாரதிய ஜனதாக் கட்சியை அடமானம் வைத்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவி நிர்மலா ஏற்பாட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி,  புதுச்சேரி மாநிலத்தில் 3 புதிய பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் பணம் விளையாடி உள்ளதாகத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் மீண்டும் பாஜகவிற்கு மூன்று நியமன எம்.எல்.ஏக்கள் வழங்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி முதலமைச்சர் மீது என்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *