
பா.ஜ.க.வின் வாக்குத் திருட்டை தடுப்பது பீகார் இளைஞர்களின் பொறுப்பு என்று நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் அரியானா தேர்தலில் வாக்குகளை திருடிவிட்டன என்பதை, நாங்கள் முழு உலகிற்கும் காட்டியுள்ளோம் என்றும், பீகாரிலும் அவர்கள் வாக்குகளைத் திருட முயற்சிப்பார்கள்.
இதைத் தடுத்து நிறுத்தி, அரசியலமைப்பைக் காப்பாற்றுவது பீகார் இளைஞர்களின் பொறுப்பு என்றும், வாக்குச் சாவடிகளில் நீங்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பீகாரில் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடியோ, கோடீஸ்வரர்களின் ஆட்சியையே விரும்புகிறார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரோ, மாநில இளைஞர்களை தொழிலாளர்களாக மாற்றுகிறார் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.




