பா.ஜ.க மக்களின் எண்ணங்களை, குழப்புகிறது என்று மனோ தங்கராஜ் குற்றசாட்டு!

பா.ஜ.க மக்களின் எண்ணங்களை, குழப்புவதற்கும் வியூகம் வகுப்பதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மக்கள் விருப்பத்திற்கு மாறாக கொண்டுவர அரசு அனுமதிக்காது என கூறியுள்ளார். மேலும், பா.ஜ.க தங்களுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் உள்ள மக்களின் எண்ணங்களை திசை திருப்புவதற்கும், குழப்புவதற்கும் வியூகம் வகுப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, நகரில் உள்ள வளங்கள் எல்லாம், அதானி மற்றும் அம்பானிக்கும் சொந்தம் என்கிற எண்ணத்தில் பா.ஜ.க செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *