
Latest News Bihar Girlfriend Chops Off Boyfriend Genitals : பிகாரீல், தனது காதலனின் பிறப்புருப்பை காதலியே வெட்டி எறிந்திருக்கிறார். இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?
Latest News Bihar Girlfriend Chops Off Boyfriend Genitals : சமீப காலமாக, நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் பல சினிமாவை விட நம்ப முடியாத வகையில் ஆச்சரியம் நிறைந்ததாகவும் கொடுமைகள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. நாளுக்கு நாள், நாளிதழில் காணப்படும் செய்திகளைப் பார்க்கையில் “இப்படியும் நடக்குமா?” என்று கூறத்தோன்றுகிறது. அப்படியொரு சம்பவம்தான் தற்போது பீகாரில் நடந்தேறியிருக்கிறது.
காதலனின் பிறப்புறுப்பை வெட்டி எறிந்த காதலி..!
பீகாரை சேர்ந்த ஒரு பெண்தான் தனது காதலனின் பிறப்புறுப்பை அறுக்கும் அந்தக் கொடூர செயலைச் செய்திருக்கிறார். மருத்துவரான இவர், பீகாரில் உள்ள பாட்னாவில் வசித்து வருகிறார். இவர், விகாஷ் சிங் என்பவருடன் காதல் உறவில் இருந்திருக்கிறார். பிறப்புறுப்பு வெட்டப்பட்ட இந்த நபர், மதுரா ப்ளாக் வார்ட் நம்பர் 12 எனப்படும் பகுதிக்குக் கவுன்சிலராக இருந்து வந்துள்ளார்.
கடந்த ஜூலை 1ஆம் தேதியன்று (ஜூலை) தனது காதலன் விகாஷ் சிங்கின் பிறப்புறுப்பை அறுத்திருக்கிறார், குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பெண். இந்தச் சம்பவம்குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், விகாஷை மீட்டு சப்பாரா பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.
காரணம் என்ன?
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவ காதலியைப் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், தாங்கள் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள விகாஷ் சிங் மறுத்ததாகவும் அப்பெண் தெரிவித்திருக்கிறார். அவர் மனதை எப்படியோ மாற்றி, இவர் பதிவு திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார். ஆனால், குறிப்பிட்ட திருமண தேதியன்று விகாஷ் சிங் திருமணம் நடைபெறும் இடத்திற்கே வரவில்லையாம். இது, அந்தப் பெண்ணிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, அவருக்குத் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவர் இப்படியொரு காரியத்தைச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
குற்றம் புரிந்திருக்கும் பெண், 25 வயதான மருத்துவர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹிஜாபூரில் வசித்து வரும் இவர், மார்ஹுவாராவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்தப் பெண், தற்போது போலீஸாரின் பிடியில் சிக்கி விசாரணைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்.
இதே போன்ற சம்பவம்..
மேற்கூறிய சம்பவம் போலவே மேலும் வேறொரு சம்பவமும் டெல்லியில் நடந்தது,
கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி 22 வயது மதிக்கத் தக்க ஒரு பெண், ரோட்டில் வியாபாரம் செய்து வரும் 35 வயது நபரின் பிறப்புறுப்பை வெட்டினார். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அப்பெண் பிறப்புறுப்பு வெட்டப்பட்ட நபரின் காதலி என்பதும், திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் அவர் இவ்வாறு செய்ததாகவும் தெரிய வந்தது. ஆனால், குற்றம் செய்த அந்தப் பெண் அதன் பிறகு தலைமறைவாகிவிட்டார். இந்தச் சம்பவம், டெல்லியில் உள்ள மங்கோல்புரி எனும் இடத்தில் நடந்தது.
பிறப்புறுப்பு வெட்டப்பட்ட நபரின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததின் விளைவுதான் இவ்வளவு பெறிய குற்றத்திற்கு காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு 11:30 மணியளவில் தனது காதலியின் அண்ணி பாதிக்கப்பட்டவருக்குப் போன் செய்திருக்கிறார். அப்போது அவசரமாக ஒரு விஷயம்குறித்து பேச வேண்டும் என்றும், நேரில் வருமாறு அழைத்திருக்கிறார். அப்போதுதான் இந்தச் சம்பவம் நடந்ததாகப் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.



