Bigg boss Tamil Season 7: போட்டியில் பல அதிரடி திருப்பங்கள்!

Advertisements

பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக 3 வைல்டு கார்டு என்ட்ரிகள் உள்ளே நுழைய உள்ளதால், அவர்களை எப்படி தோற்கடிப்பது என்ற திட்டத்தில் போட்டியாளர்கள் ஈடுபட்டனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை எட்டியுள்ளது. நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது. முதல் மாதத்தின் இறுதியில், 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றனர். அதன்பின்னர் பிக்பாஸ் வீட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டனர். போட்டியாளர்கள் இரு கூட்டணியாக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்ற கானா பாலா வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில், பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக பூகம்பம் வெடிக்க உள்ளதாக கூறிய பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். அதாவது, பிக்பாஸ் வீட்டில் புதிதாக 3 வைல்டு கார்டு என்ட்ரிகள் உள்ளே வர உள்ளதாகவும், அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், பிக்பாஸ் வீட்டாளர்களுக்கும், வைல்டு கார்டு என்ட்ரிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியில் வைல்டு கார்டு என்ட்ரிகள் வெற்றிப்பெற்றால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 3 பேர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரிகள் உள்ளே நுழைய உள்ளதால் போட்டியாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அதேநேரம், உள்ளே வைலடு கார்டு என்ட்ரிகளை வரவிடாமல் இருக்க என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையிலும் போட்டியாளர்கள் ஈடுபட்டனர். மீண்டும் வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் உள்ளே வைல்டு கார்டு என்ட்ரியாக வர உள்ளதால் போட்டியில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட உள்ளன.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *