Sivakasi : நாடு முழுவதும் ரூ.6,000 கோடிக்குப் பட்டாசு விற்பனை!

நாடு முழுவதும் ரூ.6,000 கோடிக்குப் பட்டாசு விற்பனையாகியுள்ளதாகத் தமிழக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பட்டாசு விற்பனை கடந்த ஒரு வாரமாகச் சூடுபிடித்துள்ளது. பொதுமக்களும் ராக்கெட், சரவெடியெனப் பல்வேறு விதமான பட்டாசுகளை வாங்கி வெடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மழை உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு பட்டாசு அதிகளவில் தேக்கமடைந்த நிலையில், இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 90 சதவீதம் விற்று தீர்ந்து விட்டதாகத் தமிழக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது : சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் தமிழகம் உள்பட பிற மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டன.

மழை காரணமாக, கடந்த ஆண்டைவிட 75 சதவீத பட்டாசுகளே உற்பத்தி செய்யப்பட்டது. நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்குப் பட்டாசுகள் விற்பனையாகியுள்ளன, எனத் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *