
சென்னை: தேசிய கல்வி கொள்கை தொடர்பாக தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தி வருகிறார். கிண்டி ராஜ் பவனில் தனியார் பல்கலை கழகத்தின் துணை வேந்தர்கள் பலரும் இதில் பங்கேற்றுள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு NETவந்தது. இதனை ஒரு சில மாநிலங்கள் ஏற்று கொண்டது. தமிழகத்தில் ஏற்று கொள்ளவில்லை. இந்நிலையில் ஆளுநர் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளார்.
இத்தகைய பல்கலை கழகங்களில் ஸ்டேட்டஸ் ஆஃப் இம்ப்ளிமெண்டஷன் ஆஃப் நேஷனல் எஜுகேஷன் பாலிசி என்ற தலைப்பிலே இன்றைய தினம் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனியார் பல்கலை கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் பல லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்த்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தனியார் பல்கலை கழகங்களில் இதனை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதம் ஊட்டியில் நடைபெற்ற அரசு துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்திலும் ஆளுநர் வலியுறுத்தி இருந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர் ஆனந்த் ராஜ், விஷ்ணு பட்டேல் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தனியார் பல்கலைக்கழகதை சார்ந்த 20 க்கும் மேற்பட்ட பல்கலைகழக நிர்வாகிகளும் இதில் பங்கேற்றுள்ளனர். தேசிய கல்வி கொள்கையில் 4 வருட படிப்புகள் மற்றும் சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளனர். கஸ்தூரிரங்கன் பழைய இஸ்ரோ தலைவர் தலைமையில் புதிய கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் ஆளுநர் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


