இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ரத்ரா தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு முன்பாக அஜித் அகர்கர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்றார். அவரது தேர்வின் கீழ் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய தேர்வுக்குழுவின் உறுப்பினராக ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த சலில் அன்கோலாவுக்கு பதிலாக, இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ரத்ரா தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டரான ரத்ரா இந்தியாவுக்காக 6 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.