
முதலமைச்சர் விஜய் திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற நிகழ்வு அனைவரின் மத்தியிலும் கவனம் பெற்றுவருகிறது. பெருவாரியாக முதல்வர் விஜயை வரவேற்ற திருச்சி மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். இந்த உரையின் எதிரொலியாக எதிர்க்கட்சிகள் பலரும் தங்களது விமர்சன பதிவை முன்வைக்க தொடங்கிவிட்டார்கள். அந்த வரிசையில் முதல் ஆளாக வந்துவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
திருச்சியில் பேசிய முதல்வர் விஜய்,எதிர்கட்சிகளை விமர்சன அம்பினால் துளைத்து எடுத்திருக்கிறார். பதவியேற்பு விழாவிற்கு பின் எந்த பொதுமேடைகளிலும் பேசாமல் இருந்த முதலமைச்சர், திருச்சியில் “என் நெஞ்சில் குடியிருக்கும் என்று உரையை ஆரம்பித்து அனல் பறக்க பேசியிருந்தார். இவ்வளவு நாள் தன் மீதும் தன் ஆட்சியின் மீதும் விமர்சனம் வைத்தவர்களை சூசகமாகவும்,நேரடியாகவும் பேசியிருக்கிறார்.
இப்போவும் சொல்றேன் திமுக,தவெக இடையிலதான் போட்டியே உங்களுக்காக உண்மையா உழைக்க வந்த இந்த விஜயா? விஜயோட ஆட்சி அமைந்திட கூடாதுனு தடுக்க நினைச்ச ஸ்டாலின் சாரா? அவ்ளோ தான். இதுக்கு நடுவுல வேற யாராவது எந்த அல்லு சில்லாவது நம்மை வந்து தடுக்கவோ, எதிர்க்கவோ பண்ணாங்கனா நிர்வாகம் அதுக்கு பொறுப்பில்ல ராஜா.. ரிசல்ட் என்னவா வரும்னு அது உங்களுக்கே தெரியும். என்று பேசியிருக்காரு.
திமுகவும் மற்றும் பலரும் ஒன்றாக சேர்ந்துக்கிட்டு விஜயோட ஆட்சி வந்திட கூடாதுனு கடைசி 5 நாளும் ஒரு கூத்து பண்ணாங்க அதாவது விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி பெரும்பான்மை இல்லாமல் இருந்த நாட்களை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இப்படியெல்லாம் கூட நடக்குமோ என்று இருந்தது. நீங்க எப்போ தீந்துபோன சக்தியோடு கூட்டு சேர்ந்துகிட்டு ஆட்சி அமைக்க நினைச்சிங்களோ அப்பவே இந்த திமுக தூர்ந்துபோன சக்தியாக மாறிடிச்சு. நீங்களலாம் நம்மல பத்தி அவதூறு பேசலாமா?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திமுகவும் மற்றும் பலரும் தினமும் அறிக்கைவிடுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் போதைக்கலாச்சாரம் பரவிக் கிடக்கிறது. அதை தொடக்கத்திலேயே நீங்கள் தடுக்கவில்லை. இப்போது பழியை தூக்கி என்மேல் போடுறீங்க.என்று பகிரங்கமான கேள்வியை எதிர்கட்சிகளிடம் எழுப்பி இருக்கிறார்.
முதல்வர் விஜயின் இந்த பேச்சிற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டுருக்கிறார். அந்த அறிக்கையில, தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், அக்கறை இல்லாம, எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்காமல் விஜய் பேசியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?என்னயா புது உருட்டா இருக்கு …
இவர் மேல பழி போட்றாங்களாம்.. தனது ஆட்சியில் இதனை குற்றங்கள் நடக்கிறதே இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா இது தன்முனைப்பு இல்லாமல் வேறென்ன ?என்று கேட்டுருக்கிறார்.
எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சிதான் காரணம் என்று கூறுகிறார் முதல்வர். இதுதான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போதுதான் கண்டுபிடித்தீர்களா? இவர் ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு கூட்டு சதி செய்தார்களாம்… சூழ்ச்சி செய்தார்களாம்.. அப்புறம் வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்று விமர்சித்திருக்கிறார்.
மேலும் கத்தி பேசுனா,கத்தி பட டைலாக் ல பேசுனா எல்லாம் உண்மை ஆயிருமா?தான் பேசுவதற்கு எதாவது ஆதாரத்தை இன்றைய முதலமைச்சர் காட்ட முடியுமா என்று வினவி இருக்காரு.ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்த, அரசியல் கேவலத்தை பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?…
எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?ஆனா ஒன்னு… ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே… எதுல? மக்களை ஏமாத்துறதுல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுல..!! அதுல நீங்க திமுகவை மிஞ்சி தான் இருப்பீங்க போல!
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க! நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க. என்று தன்னுடைய விமர்சன பிளம்பை கக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ஏற்கனவே அதிமுக கட்சி பிளவு, அதிமுகவினர் தவெக வில் இணைவது போன்ற கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளால் எரிச்சலைந்திருக்க கூடிய EPS , முதலமைச்சரின் பேச்சிற்கு, தன்னுடைய முழு கருத்து மற்றும் அரசியல் கோபத்தை காட்டியிருக்கார் என்று கூறி வருகிறார்கள் அரசியல் நோக்கர்கள்…
இன்னும் எத்தனை விமர்சங்களுக்கு உள்ளாக போகிறதோ முதல்வரின் திருச்சி உரை… அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் பார்க்கலாம்.




