காசாவில் போர் முடிவுக்கு வந்ததன் பின்னணி என்ன..?

Advertisements

காசாவில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்த நிலையில் கூட இஸ்ரேலிய வலது சாரிகள் மீண்டும் மீண்டும் போர் தேவை உள்ளது என்று தூண்டி வரும் நிலையில் அமெரிக்கா அவசரமாக தனது சகாக்களின் உதவியுடன் இஸ்ரேலுக்கு மிகவும் கடுமையாக முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எகிப்தின் செங்கடல் ஓரத்தில் ஷார்ம் எல்-ஷேக் என்ற ரிசார்ட்டில், இஸ்ரேலிய மற்றும் பாலத்தீன பேச்சுவார்த்தையாளர்கள் ஹோட்டலின் தனித்தனி மாடிகளில் இருந்தனர். கத்தார் மற்றும் எகிப்தைச் சேர்ந்த மத்தியஸ்தர்கள் அவர்களுக்கு இடையில் தொடர்பை ஏற்படுத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை மூலம் தான் தெளிவான தீர்வு ஏற்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. பேச்சுவார்த்தைக்கு வலு சேர்க்கவும், இஸ்ரேலியர்களுக்கு அழுத்தம் கொடுக்கவும், டிரம்ப் தனது மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பை அனுப்பினார்.

ஹமாஸ் குழுக்கு அழுத்தம் கொடுக்க கத்தார் பிரதமர், எகிப்து மற்றும் துருக்கி உளவுத்துறைத் தலைவர்கள் வந்திருந்தனர்இந்த ஒப்பந்தம் பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றாலும், அதற்கு போர் முடிந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல.

ஆனால் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த துயரச் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வரும் வாய்ப்பு இதன் மூலம் தற்போது உருவாகியுள்ளது எனலாம்.இஸ்ரேலின் வெற்றி என்பது பணயக்கைதிகள் வீடு திரும்புவது மட்டுமல்ல. ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும், மேலும் இஸ்ரேலுக்கு ஆபத்தாக உருவாக முடியாதபடி இருக்க வேண்டும்” என நெதன்யாகு பலமுறை கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் ஒரு பெரிய முன்னேற்றம் தான். ஆனால், போரை முடிக்க இன்னும் பல படிகள் தேவை. டிரம்பின் திட்டம் ஒரு அடிப்படைக் கட்டமைப்பு மட்டுமே. இதுகுறித்த மேலதிக விபரங்கள் பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.இஸ்ரேல் கடந்த இரண்டு ஆண்டுகளாக போரிட்டு 237 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை இந்த போருக்காக செலவு செய்து உள்ள நிலையில் எந்தவொரு வெற்றியையும் பெற முடியாத நிலையில் அந்த நாட்டின் ஜி டி பி 5.7 சதவீதம் என்ற அளவில் குறைந்து விட்டதாக பொருளாதார நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போரில் யூத சியோனிச தத்துவத்திற்கு ஆதரவாக வலதுசாரி சித்தாந்தம் மிகவும் கடுமையான ஆழுத்தத்தை கொடுத்து வந்த நிலையில் கூட ஒரு நிலையில் தற்போது அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நிதான்யாகு வின் வரம்பற்ற போக்கை முடிவுக்கு கொண்டு வந்தது என்பது மிகவும் முக்கியமான காரணியாக இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அமெரிக்கா வரலாற்றில் ஒரு நாட்டிற்கு அதுவும் அமெரிக்கா வரலாற்றில் அமெரிக்கா ஜனாதிபதிகளிலேயே டொனால்ட் ட்ரம்ப் போன்று இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவளித்த ஒரு தலைவர் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகவும் அதிகமான அளவில் பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவிகளை செய்து வந்த நிலையில் கூட இஸ்ரேல் பொதுமக்களை தான் கொல்ல முடிந்ததை தவிர ஹமாஸ் இயக்கத்தின் ஆணி வேரை அவர்களால் முழுமையாக அழிந்து விட முடியவில்லை என்பதை சர்வதேச நாளேடுகள் தெளிவாக சுட்டி காட்ட தவறவில்லை என்பதே யதார்த்தமான நிலையாகும்.

மிகவும் முக்கியமான ஒன்றாக இஸ்ரேல் ராணுவம் அமெரிக்காவின் முக்கிய கூடடாளியான கத்தார் மீது தீடிரென தாக்குதலை நடத்தி 6 பேரை கொலை செய்த சம்பவம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பை மற்றும் அல்லாமல் அவரது அரசின் சக துறை சார்ந்த ஆளுமைகள் அனைவரையும் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்தது தான் இந்த போர் முடிவுக்கு வர மிகவும் முக்கியமான காரணியாக விளங்குகிறது என்பதை நாம் சுட்டி காட்ட வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

செப்டம்பர் 9 அன்று தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை கொல்ல இஸ்ரேல் முயற்சி செய்தது. ஆனால் அது தோல்வியடைந்த முயற்சியாக இருந்தாலும் ஒரு முக்கிய திருப்புமுனைக்குக் காரணமான நிகழ்வாக அமைந்தது. அந்தத் தாக்குதலின் பிரதான இலக்காக ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யா மற்றும் முக்கிய துணைத் தலைவர்கள் குறிவைக்கப்பட்டனர். அவர்கள் அந்த நேரத்தில் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த போர் நிறுத்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அல்-ஹய்யாவும் அவரது குழுவினரும் தாக்குதலில் உயிர் தப்பினார்கள், ஆனால் அவரது மகன் உயிரிழந்தார். தற்போது அல்-ஹய்யா எகிப்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் குழுவை வழிநடத்துகிறார்.இஸ்ரேல், கத்தார் மீதான இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கோபமடைந்தார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் டொனால்ட் டிரம்பைச் சந்திக்க நெதன்யாகு அனுமதி கேட்டபோது, கத்தார் பிரதமரை தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்கும்படி நெதன்யாகுவை வலியுறுத்தினார் டிரம்ப்.நெதன்யாகு தாம் தயார் செய்திருந்த மன்னிப்பு உரையை போனில் வாசித்தபோது போன் ஹாண்ட்செட் கேபிள் நீண்டு இருந்தது. ஏனெனில் டிரம்ப் போனை தன் மடியில் வைத்து கொண்டு நெதன்யாகு பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்த தருணம் ஒரு ஆசிரியர் தவறு செய்த மாணவனை மன்னிப்பு கேட்கச் சொல்லும் காட்சி போலிருந்தது. அந்த தருணத்தின் புகைப்படங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டது.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவை வெளியிட்டு, கத்தார் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானால் அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பை வழங்கும் என அறிவித்தார்.

கத்தார், அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாகவும், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளத்தைக் கொண்ட நாடாகவும் உள்ளது. மேலும் பிராந்திய அமைதிக்கான டிரம்பின் பரந்த திட்டத்தின் முக்கிய பகுதியாகும் என்பதால் அவருக்கு அந்த மன்னிப்பு தேவைப்பட்டது.

அந்த திட்டத்தின் மையத்தில், செளதி அரேபியா இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கும் ‘பெரிய ஒப்பந்தம்’ ஒன்று உள்ளது. ஆனால், தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதல் அமெரிக்காவை தங்கள் கூட்டாளிகளைப் பாதுகாக்க இயலாத ஒரு நாடாக வெளிப்படுத்தி விட்டது.

இது அமெரிக்கா வின் சுயமரியாதைக்கு விடப்பட சவாலாக அமைந்தது என்பது தான் இந்த போர் முடிவுக்கு வர மூல காரணம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.அதே சமயம் அமெரிக்கா இன்னும் இஸ்ரேலின் சக்திவாய்ந்த கூட்டாளியாக இருந்தாலும், சமீபத்திய கருத்துக் கணிப்புகள் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இஸ்ரேலை ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற பல நாடுகள் பாலத்தீனத்தை அரசாக அங்கீகரித்துள்ளன.காஸாவில் நடந்த அழிவுகள், உதவிப் பொருட்கள் மீது இஸ்ரேல் விதித்த தடைகளால் ஏற்பட்ட பஞ்சம் குறித்து இந்நாடுகள் தங்களது பொது அறிக்கைகளில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

செப்டம்பர் 9 அன்று தோஹா மீது நடத்தப்பட்ட தாக்குதல், அரபு மற்றும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் புதிய அவசர உணர்வை உருவாக்கியது. அரிதான வகையில் ஒன்று திரண்ட இந்த நாடுகள் இஸ்ரேலை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர டொனால்ட் டிரம்புக்கு அழுத்தம் தந்தது.

அதே போல டிரம்ப் முன்வைத்த 20 அம்சத் திட்டம் உண்மையில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனில், அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.இந்த ஒப்பந்தம் அடிப்படையில் பிணைக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதற்கு அவகாசம் தேவைப்படுவதாக இஸ்ரேலிடம் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளன.பிணைக்கைதிகளை பரஸ்பரமாக விடுவித்தனர். மொத்தம் 28 பிணைக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் படிப்படியாக ஒப்படைத்து வருகிறது. பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய பெட்டிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் இயக்கம் ஒப்படைத்து வருகிறது. அண்மையில், பிணைக்கைதியின் உடலுக்கு பதிலாக வேறு உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல், தங்கள் நாட்டைச் சேர்ந்த பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் முறையாக ஒப்படைக்க வேண்டும் என்று ஹமாஸூக்கு எச்சரிக்கை விடுத்தது. அதேவேளையில், ஹமாஸ் ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை எனில், இஸ்ரேல் காசாவில் தாக்குதலை தொடங்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு மேலும் இரு பிணைக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. மேலும், காசாவின் இடிபாடுகளில் சிக்கியுள்ள பிணைக்கைதிகளின் உடல்களை மீட்டுக் கொண்டு வர அவகாசமும், நவீன உபகரணங்களும் தேவை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. தற்போது வரை மொத்தம் 28 உடல்களில் 9 பேரின் சடலங்கள் இஸ்ரேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்தியஸ்தம் செய்த நாடுகளின் உதவியுடன் எஞ்சியவர்களின் உடல்களை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.அமெரிக்கா வரலாற்றில் பல்வேறு போரில் அவர்கள் நேரடியாக ஈடுபட்ட நிலையில் தோல்வியை சந்தித்து தான் வெளியேறும் நிலையில் உலகின் எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்று சித்தரிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் இருந்து வந்த நிலையில் ஹமாஸ் இயக்கம் இந்த மாய பிம்பத்தை முழுமையாக அழித்து விட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அதேநேரத்தில் வெறும் 22,250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நகரம் தான் காசா ஆகும். அங்கு தான் ஹமாஸ் இயக்கத்தின் 40000 மேற்பட்ட போராளி குழுக்கள் செயல்பட்டு வந்த நிலையில் அந்த ஒரு சிறிய குழுவை அழிப்பதாக கூறி கொண்ட இஸ்ரேல் தோல்வியை சந்தித்து வெளியேறியது என்பதை உலகிற்கு ஹமாஸ் இயக்கம் அறிவிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது வரை காசாவில் வாழ்ந்த மக்களில் 70,000 மேற்பட்ட மக்களை இஸ்ரேலிய ராணுவம் படுகொலை செய்துள்ள நிலையில் இது ஒரு அப்பட்டமான மனித இன படுகொலை என்று உலகத்தின் பெரும்பாலான மக்கள் நீதிமன்றம் சுட்டி காட்டியது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 1,70000 மேற்பட்ட பொதுமக்கள் குண்டு வீச்சில் உறுப்புக்களை இழந்த நிலையிலும் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்ற மக்களாக மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போரில் அமெரிக்க இதுவரையில் 900 மேற்பட்ட கார்கோ விமானங்கள் மூலமும், 150 கப்பல்கள் மூலமும் ஆயுதங்கள், மெக்கோவா டாங்கிகள் துணை ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை அனுப்பிய நிலையில் இஸ்ரேல் ராணுவம் இந்த பேரழிவு ஆயுதங்கள் அனைத்தையும் பயன்படுத்திய நிலையில் கூட வெற்றி பெறாமல் வெளிவந்தது உண்மையில் மிகப் பெரிய அதிர்ச்சி தகவல்கள் என்பது தான் உண்மை.

அதேநேரத்தில் இஸ்ரேல் மக்களில் பல இலட்சக்கணக்கான மக்கள் இனி இஸ்ரேல் வாழ தகுதியற்ற தேசம் என்பதை முடிவு செய்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள முடிகிறது. இதுவரையில் 136000 பேர் நிரந்தரமாக வெளியேறிய நிலையில் இன்னும் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்து தொடர்ந்து வெளியேறி கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் குடியேறி வருவதாக இஸ்ரேல் டைம்ஸ் நாளிதழில் வெளியான கட்டுரை தெளிவாக கோடிட்டுக் காட்டி உள்ளதை நாம் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த சமாதானம் இன்னும் பல்வேறு தடைகளை கொண்டு பயணிக்கும் நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது சக அமைச்சர்கள் மத்தியில் ஒரு தெளிவான கருத்துருவாக்கம் உருவாகி உள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயம் அடுத்த மாதம் சவூதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான், துருக்கி, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் அமெரிக்கா வுக்கு தரும் அழுத்தம் காரணமாக அமெரிக்கா தற்போது இந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்தே ஆக வேண்டிய தேவையுள்ளது என்பது இந்த ஒப்பந்தத்தில் மிகவும் முக்கியமான காரணியாக விளங்குகிறது என்பதை நாம் மறுக்க முடியாத ஒன்றாகும்.

அதேநேரத்தில் இதே சூழல் தொடரும் நிலையில் பாலஸ்தீனம் தனி சுதந்திர நாடாக மாறும் நிலையில் அதிகம் தொலைவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *