சென்னை :
வங்கதேசத்திலிருந்து 49 மாணவர்கள் பத்திரமாக சென்னை வந்துள்ளனர் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க வங்கதேசம் சென்ற மாணவர்கள், சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இந்நிலையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலகத் தமிழர் நலத்துறை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, துணை கமிஷனர் ரமேஷ் ஆகியோர் மாணவர்களை வரவேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், வங்கதேசம் சென்று மருத்துவம்
படித்து வந்த மாணவர்களில் 49 பேர் பத்திரமாக சென்னை வந்துள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்
