Donald Trump : ஜனநாயகத்துக்காக குண்டை உடலில் வாங்கினேன் – டொனால்ட் டிரம்ப்!

Advertisements
அமெரிக்கா :
ஜனநாயகத்துக்காக குண்டை உடலில் வாங்கினேன்  என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த 14-ந் தேதி பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் டிரம்ப் பிரசாரம் செய்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது வலது காதில் தோட்டா உரசி சென்றதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில், கொலை முயற்சியிலிருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். மிச்சிகன் மாகாணத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சிலர் சொல்வதாகவும், ஆனால் அவர், ஜனநாயகத்திற்காக ஒரு குண்டை உடலில் வாங்கினேன் என்றும் கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *