அறிமுக போட்டியில் சதமடித்து அசத்திய ஜெய்ஸ்வால்! இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 162 ரன்கள்முன்னிலை!

Advertisements

டொமினிகா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 40 ரன்னும், ரோகித் சர்மா 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Advertisements

இந்நிலையில், 2-வது நாளான இன்று இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடினர். இதையடுத்து, அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். தொடக்க ஜோடி 200 ரன்களைக் கடந்து ஆடி வருகிறது. ஜெய்ஸ்வால் 215 பந்துகளில் சதமடித்தார். அவரை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சதமடித்து அசத்தினார். ஆனால் 103 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து இறங்கிய சுப்மான் கில் 5 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய விராட் கோலி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடினார்.

இறுதியில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 143 ரன்னும், விராட் கோலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது வரை இந்தியா 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *