சீனாவை வீழ்த்தி இந்திய அணி தங்கம்!
பாங்காக்: பாங்காக்கில் நடந்து வரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோதி, பர்னீத் மற்றும் அதிதி அடங்கிய இந்திய மகளிர் அணி, சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றது.
தாய்லாந்தில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. காம்பவுண்டு மகளிர் பிரிவில் இந்தியாவின் ஜோதி, பர்னீத் மற்றும் அதிதி அடங்கிய இந்திய மகளிர் அணி, சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றது.
நேற்று (நவ.,08) காம்பவுண்டு கலப்பு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அதிதி, பிரியான்ஷ் ஜோடி, கஜகஸ்தானின் அடெல், ஆன்ட்ரே ஜோடியை சந்தித்தது. முதல் செட்டில் இந்திய ஜோடி 38-39 என பின்தங்கியது. அடுத்த செட் 40-40 என சமநிலை ஆனது.
நான்காவது செட்டில் இந்தியா 40-39 என முன்னிலை பெற, ஸ்கோர் 118-118 என ஆனது. கடைசி செட்டில் இந்திய ஜோடி சிறப்பாக செயல்பட 39-37 என ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 157-155 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.