தமிழகத்தில் டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் டிட்வா புயல், மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வருகிறது. இந்த, நிலையில் சென்னைக்கு தெற்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் டிட்வா புயல் உள்ள நிலையில், நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை வந்தடையும் என வானிலை மையம் தெரிவித்தது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கன மழைப் பெய்து வருகிறது. இதில், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிக்களுக்கும் இன்று விடுமுறை என்றும், எட்டு மாவட்டங்களில் உள்ள கல்லூரிக்கும் மட்டும் விடுமுறை என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. தொடர்ந்து, புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
