
கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைக் குடும்பத்துடன் சென்று பார்வையிட்டார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்திற்குத் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.
அவர் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் சுற்றுலாப் படகு மூலம் சென்று விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்றார்.
அங்கிருந்து கண்ணாடிப் பாலம் வழியாகச் சென்று திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட்டார். ஆளுநர் வருகையை ஒட்டிக் கன்னியாகுமரியில் காவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

