Vijay Tv Pugazh: தாயும் சேயும் நலம்.” என்ற கேப்ஷனை பதிவிட்டு நெகிழ்ச்சி!

Advertisements

குக் வித் கோமாளி புகழ் – பென்சி ரியா தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் பல கலமாகப் பணியாற்றி வந்த புகழ், குக் வித் கோமாளி என்ற காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சிமூலம் பிரபலமானார்.டைமிங் காமெடி செய்து பலரின் மனதில் இடம்பிடித்தார்.அதைத் தவிர்த்து, பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார்.இதுவரை நடந்து முடிந்த குக் வித் கோமாளியின் நான்கு சீசன்களில் 3 சீசன்களில் பெற்றுள்ளார்.

வலிமை, எதற்கும் துணிந்தவன், யானை, அயோத்தி, ஆகஸ்ட் 16 1947 ஆகிய படங்களில் நடித்துள்ளார். மிஸ்டர். ஜூக்கீப்பர் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.2022 ஆம் ஆண்டில் பென்சி ரியா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தன் மனைவி கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தியையும் முன்னர் அறிவித்தார்.

தற்போது இந்தத் தம்பதிக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. “இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையைப் பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்குக் கிடைத்த மற்றொரு தாய் என் மகள்… மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள். என்மகளே …தாயும் சேயும் நலம்.” என்ற கேப்ஷனை பதிவிட்டு அக்குழந்தையின் பாதங்களைப் புகைப்படம் எடுத்து ஷேர் செய்துள்ளார் புகழ்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *