Palakkai Recipe: ருசியான பலாக்காய் பொரியல்!

Advertisements

நீங்கள் அடிக்கடி பலாக்காயை பார்த்திருப்பீர்கள் ஆனால் அந்த காயில் இப்படி ஒரு ருசியான பொரியல் செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா ?

தேவையான பொருட்கள்:

பலாக்காய்.
தேங்காய்.
உப்பு.
மஞ்சள்.
சீரகம்.
பச்சை மிளகாய்.
எண்ணெய்.
கடுகு.
உளுந்து.
கடலை பருப்பு.
கறிவேப்பிலை.
கொத்தமல்லி.
மிளகாய் தூள்.
கரம் மசாலா.
வெங்காயம்.

செய்முறை:

பலாக்காயை தோல் நீக்கி நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். தோல் நீக்கிய பலாக்காயை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் நறுக்கிய பலாக்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக விட வேண்டும். குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக விட வேண்டும். பின்னர் குக்கரை திறந்து தண்ணீரை வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் கொஞ்சமாக தேங்காய் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 3 பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு சூடான கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். கடலை பருப்பு நிறம் மாற ஆரம்பிக்கும் போது ஒரு ஸ்பூன் கடுகு மற்றும் உளுந்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடிக்க ஆரம்பிக்கும் போது அதில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாடை போன உடன் அதில் அரை ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கால் ஸ்பூன் கரம் மசாலா தூளை சேர்க்க வேண்டும்.

மசாலாவை நன்றாக கலந்து விட்டு பிறகு ஏற்கனவே வேக வைத்த பலாக்காயை சேர்க்க வேண்டும். கலந்து விட வேண்டும் . அதில் ஏற்கனவே அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் மூடி வைக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கலறி விட்டு மீண்டும் இரண்டு நிமிடம் வைக்க வேண்டும். அவ்வளவு தான் ருசியான பலாக்காய் பொரியல் ரெடி.

இந்த பலாக்காய் பொரியல் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். மேலும் புளிக்குழம்பு சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ருசி அட்டகாசமாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *