Advertisements

மேஷம்

நீங்கள் இன்று கோவில் விழாக்களில் பங்கு கொள்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். மேலும் திருப்தி கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். இதனை சமாளிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.உங்கள் துணையுடன் தகவல் பரிமாற்றத்தில் பிரச்சினைகள் காணப்படும். இதற்கு உங்களிடம் காணப்படும் அகந்தை போக்கே காரணமாகும்.இன்று கூடுதல் செலவினங்கள் ஏற்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறய அளவில் கடன் வாங்குவீர்கள்.நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். இதனால் தலைவலி ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்

இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். ஆற்ற வேண்டிய செயல்கள் அதிகமாக இருக்கும். அதிக முயற்சியின்றி உங்கள் இலக்குகளை அடைவீர்கள். பரந்த நோக்குடன் இருப்பீர்கள். புதிய கருத்துகளை கொண்டிருப்பீர்கள்.உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். குறித்த நேரத்திற்கு முன்பே பணிகளை முடிப்பீர்கள். இதற்கு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.உங்கள் துணையுடன் நேர்மையான அணுகுமுறை கொள்வீர்கள். இதனால் உங்கள் பிரியமானவர் உங்களை நன்கு புரிந்து கொள்வார்.நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். அதிகமான பணம் சேமிப்பீர்கள்.உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
மிதுனம்

இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. வெற்றியை நோக்கி உங்கள் இலக்குகளை அமைத்துக் கொள்வது சிறந்தது. இன்று அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள்.பணியில் யதார்த்தமான அணுகுமுறை வெற்றியை அளிக்கும். இதன் மூலம் எளிதில் வெற்றி பெறலாம்.குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் மோதல் ஏற்படும். இதனால் தவறான புரிந்துணர்வு ஏற்படும். இதனை பரஸ்பரம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. கூடுதல் செலவினங்கள் ஏற்படும். அது சுமையாக காணப்படும். கவலையை உண்டாக்கும்.மன உளைச்சல் காரணமாக கால் வலி ஏற்படும். இதனை தவிர்க்க இன்று உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
கடகம்

இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. இன்று உங்கள் அணுகுமுறையில் உறுதி மிகவும் அவசியம். பணிச்சூழல் திருப்திகரமாக இருக்காது. இன்று காணப்படும் பணி இறுக்கம் உங்களை கவலைக்குள்ளாக்கும். உங்கள் பணி வழிமுறைகளை திட்டமிட வேண்டும்.உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது.இன்று பண வரவிற்கான சாத்தியம் உள்ளது. பணத்தை கவனமாகவும் சாதுர்யமாகவும் செலவு செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக செலவு ஏற்படலாம். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
சிம்மம்

இன்று ஆக்கபூர்வமான பலன்கள் கிடைக்காது. இதனால் தன்னம்பிக்கையும் உறுதியும் இழந்து காணப்படுவீர்கள். மாற்றங்களும் பயணங்களும் காணப்படும். இன்று உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம்.உங்கள் பணிகளை முறையாக செய்ய வேண்டும். பணிச்சுமை காரணமாக இன்று பணியில் தவறுகள் நேரலாம்.பாதுகாப்பற்ற உணர்வின் காரணமாக உங்கள் துணையிடம் தேவையற்ற வார்த்தைகளை பேசுவீர்கள். இதனை தவிர்த்தல் வேண்டும். பக்குவமான அணுகுமுறையோடு அன்பாக பழக வேண்டும்.இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். உங்கள் உடனடித் தேவைகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.தலைவலி மற்றும் தொண்டை வலி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி

இன்றைய நாள் வரவேற்கத்தக்கதாக இருக்காது. சில சமயங்களில் பொறுமை இழப்பீர்கள். உணர்ச்சி வசப்ப்டுவீர்கள். அந்தச் சமயங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது.உங்கள் செயல்திறனில் நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். உங்களின் பணியாற்றும் முறை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது. பரஸ்பர அன்பு காணப்படும்.
இன்று பணபுழக்கம் அதிகமாக காணப்படும். பயனுள்ள வகையில் சேமிப்பீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். நிதிநிலையில் சுதந்திரமான நிலைமை காணப்படும்.உங்களிடம் காணப்படும் நேர்மறை எண்ணம் மற்றும் மகிழ்ச்சியான மனநிலை காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
இன்று பணபுழக்கம் அதிகமாக காணப்படும். பயனுள்ள வகையில் சேமிப்பீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். நிதிநிலையில் சுதந்திரமான நிலைமை காணப்படும்.உங்களிடம் காணப்படும் நேர்மறை எண்ணம் மற்றும் மகிழ்ச்சியான மனநிலை காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
துலாம்

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும்.புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள்.உங்கள் சக பணியாளர்கள் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார்கள். புதிய வேலைக்கான வாய்ப்பு உள்ளது. பயணங்கள் ஏற்படலாம்.உங்கள் சமயோசித புத்தி காரணமாக உங்கள் துணையிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள்.உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்.உங்கள் கடின உழைப்பின் மூலமாக ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வகையில் பண வரவு காணப்படும். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும். திடமாக காணப்படுவீர்கள்.
விருச்சிகம்

இன்று பலன்கள் தாமதமாக கிடைக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது. இன்று அவ்வளவு சிறப்பான நாளாக அமையாது. இன்று எதையும் எதிர்பார்க்காதீர்கள்.இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் பணியாற்றும் முறையை திட்டமிட்டு செயலாற்றுங்கள்.சமநிலையும் நகைச்சுவை அணுகுமுறையும் உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள உதவும்.உங்கள் பிரியமானவரிடம் பேசும் போது கவனமாகப் பேசவும்.நிதி வளர்ச்சி இன்று மகிழ்ச்சிகரமானதாக காணப்படாது. கூடுதல் செலவினங்கள் ஏற்படலாம்.உங்கள தாயின் சிறிய உடல் நலப் பிரச்சினை ஒன்றிற்காக பணம் செலவு செய்ய நேரும். இது உங்களுக்கு கவலையை உருவாக்கும்.
தனுசு

ஆன்மீக நாட்டம் வளர்ச்சியையும் ஆறுதலையும் தரும். இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்க புது வழிகள் காண்பீர்கள். அவசர முடிவுகள் எதையும் எடுக்காதீர்கள். அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. உங்கள் அன்றாட பணிகளை கவனமுடன் செய்ய வேண்டும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.உங்கள் துணையிடம் அகந்தையின்றி பழக வேண்டும். உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் மனம் திறந்து கூற வேண்டும்.இன்று நிதியில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். இன்று காணப்படும் பணப்பற்றாக்குறை உங்களுக்கு கவலையை அளிக்கும்.மன உளைச்சல் மற்றும் கால் வலிக்கான சாத்தியம் உள்ளது. நீங்கள் ஆரோக்கியமாய் இருக்க அமைதியாய் இருக்க வேண்டும்.
மகரம்

இன்று சிறப்பான நாள். இன்று சுறுசுறுப்புடனும் மும்மரமாகவும் காணப்படுவீர்கள். இன்று நற்பலன்கள் கிடைக்கும்.பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பணியில் நற்பெயர் கிடைக்கும்.உங்கள் துணையுடன் அமைதி பராமரிப்பீர்கள். இதனால் உங்கள் துணையுடனான உறவில் நல்லிணக்கம் காணப்படும்.இன்று நிதிவளர்ச்சி சீராக காணப்படும். நீங்கள் கணிசமான தொகை சேமிப்பீர்கள்.இன்று ஆரோக்கிய பிரச்சினை ஏதும் காணப்படாது. சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
கும்பம்

இன்று ஆன்மீக அணுகுமுறையை நீங்கள் பற்றிக்கொள்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கையால் சாதனை புரிவீர்கள். இன்று அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் நாள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.இன்று பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்கள். உங்களின் இந்த அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். உங்களின் அனுசரணையான போக்கு உங்கள் துணையை மகிழ்விக்கும். எனவே இன்றைய நாள் இனிமையாக இருக்கும். உறவில் திருப்தி நிலவும்.இன்று பண வளர்ச்சி சிறப்பாக காணப்படும். சலுகை அல்லது ஊக்கத்தொகையாக இன்று பணம் கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.
மீனம்

நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும் அளவிற்கு இன்றைய தினம் சாதகமாக இருக்காது. மனக்குழப்பத்திற்கு ஆளாக நேரலாம். பதட்டப்படாமல் இன்றைய பணிகளை திட்டமிடுங்கள். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை திட்டமிட வேண்டும். இன்று திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.இன்று உங்கள் துனையிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் கருத்து வேறுபாடு ஏற்படும். எனவே நட்பான அணுகுமுறை தேவை.பயணத்தின் போது பண இழப்புகள் ஏற்படலாம். எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.இன்று ஆரோக்கியம் குறைந்து காணப்படுவீர்கள். ஜீரணம் சம்பத்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும். நீரை அதிகமாகப் பருகுங்கள்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

