
ஐ.பி.எல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலம், நியூ சண்டிகாரில் 19 ஆவது ஐ.பி.எல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான எலிமினேட்டர் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் அதிரடியாக விளையாடிய வைபவ் சூரிய வன்ஷி 97 ரன்களும், துருவ் ஜுரேல் 50 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதரபாத் அணி 19 ஓவர்களில் 196 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம், ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.




