
இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு மற்றும் மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகளை உலகிற்கு எடுத்துரைத்தது புனித பக்ரீத் பெருநாள் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பெருநாளையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உலகெங்கிலும் வாழுகின்ற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் இந்த பக்ரீத் பெருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு மற்றும் மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகளை உலகிற்கு எடுத்துரைக்கும் புனித பக்ரீத் பெருநாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களை இணைக்கும் அன்பும், ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் மனப்பான்மையும் தான் பக்ரீத் பெருநாள் எடுத்துரைக்கும் செய்தி என்று குறிப்பிட்டுள்ளார். சமூக நல்லிணக்கத்தையும் மத நல்லுறவையும் காக்கும் பணியில் அனைவரும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அன்பும், சகோதரத்துவமும், மனிதநேயமும் தமிழகமெங்கும் என்றும் நிலைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


