
உலகிலேயே மிகவும் கொடியது எது தெரியுமா.? வறுமையினால் வாடும் வயிற்று பசிதான் .. அப்படிப்பட்ட பட்டினி – பசி நாள் தான் இன்று..இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் உலகம் முழுவதும் நிலவும் கடுமையான பட்டினி, வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்த நாளின் முதன்மை காரணி . 2011-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது..கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது..
இந்த பட்டினியை முடிவுக்குக் கொண்டு வருவது நம் கைகளில்தான் உள்ளது ..மேலும் , உலகளவில் சுமார் 673 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடும் பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. போர், பருவநிலை மாற்றம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்றவை இந்த நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் , காசாவில் மக்கள் நாளுக்கு நாள் மக்கள் போரினால் நிலவக்கூடிய பசி , பட்டினிக்கு ஆளாகி சித்திரவதை படுகின்றனர்.. மேலும் , இன்றைய தினம் பக்ரீத் , இஸ்லாமிய பெருமக்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது ..
இந்நிலையில் , போர் சூழல் மற்றும் பதற்றம் காரணமாக , அங்கு அவர்களால் தொழுகையை கூட மனதார அமைதியோடு செய்யமுடியாமல் அவசியுற்று வருகின்றனர்..,மேலும் , அங்கு நிலவக்கூடிய வான்வழித் தாக்குதல்கள், கடுமையான உணவுத் தட்டுப்பாடு உள்ளிட்ட துயரங்களுக்கு மத்தியிலும் காசாவில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..
அனைவரும் , அன்புடனும் , சமாதானத்துடனும் , சகோதரத்துடனும் அமைதியோடும் , மனமகிழ்வோடும் பசி இல்லாத இந்தியாவை கட்டமைப்போம்…இதனை உலகம் முழுமைக்கும் எடுத்து செல்ல விழிப்புணர்வோடு செயல்படுவோம்…
Published On : May 28, 2026
Written By – A. Jenisha



