ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்! பிரதமர் மோடி…
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் காங்கிரசின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. முதற்கட்ட தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தோல்வி அடையும் என்பது உறுதியாகிவிட்டது என பிரதமர் மோடி பேசினார்.
சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரசிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். சத்தீஸ்கர் முதல்வரின் நெருங்கிய உதவியாளர் சிறையில் உள்ளார். மஹாதேவ் பந்தய செயலி மூலம் முதல்வர் பூபேஷ் பாகேல் எவ்வளவு பணம் பெற்றார் என்பதை காங்கிரஸ் வெளியிட வேண்டும்.
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலின் முதற்கட்டத்தில் பாஜ., வுக்கு ஆதரவாக ஓட்டளித்த மக்களுக்கு நன்றி. வளர்ச்சி குறித்து நான் தொடர்ந்து பேசுவது காங்கிரசுக்கு பிடிக்கவில்லை. சத்தீஸ்கரில் காங்கிரசின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.
முதற்கட்ட தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தோல்வியடையும் என்பது உறுதியாகிவிட்டது. 5 ஆண்டுகளாக மக்களிடம் கொள்ளையடித்த காங்கிரஸ் தலைவர்கள் விடைபெறும் நேரம் வந்துவிட்டது. சத்தீஸ்கர் இளைஞர்கள் கனவுகள் நனவாகும். சத்தீஸ்கரில் பாஜ., ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.