Ayodhya Ram Mandir Inauguration: பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ரத்தனகிரி அருள்மிகு ஶ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் பாஜக கட்சியினர் சார்பில் சிறப்பு பூஜை வழிபாடு செய்தனர்.

உத்திர பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று வருவதை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நிர்வாகிகள் பலர் உலக மக்களின் நன்மை வேண்டியும் ஜாதி, மதம், பேதமின்றி அனைவரும் சகோதரத்துவம் ஓங்கும் விதமாக கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு பூஜை வழிபாட்டு நிகழ்ச்சி போது அருள்மிகு ஶ்ரீ பாலமுருகன் சுவாமிக்கு பல்வேறு விதமான அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க மஹா மங்கல தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் சிறப்பு வாய்ந்த பூஜையில் பங்கேற்ற பாஜக கட்சியினர் அனைவரும் கோவில் உள்ளே ஸ்ரீ ராம ஜெயம்.. ஸ்ரீ ராம ஜெயம்.. என பக்தி கோஷங்களை எழுப்பியவாறு முருகரை பக்தி மனத்தோடு வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து ரத்தினகிரி திருக்கோவிலில் நடைபெற்ற அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத்துறை மற்றும் காவல்துறை சார்பாக எவ்வித இடையூறு இன்றி முழு அனுமதியோடு பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பூட்டுதாக்கு பகுதியில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் அயோத்தியில் நடைபெறும் நேரடி ஒளிபரப்பு கும்பாபிஷேக நிகழ்வை பொதுமக்கள் அனைவரும் பார்வையிடும் வகையில் எல்இடி திரையரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் அனைவருக்கும் மாபெரும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *