பரபரப்பை கிளப்பிய மம்தா பானர்ஜி..விபத்தில் பாஜகவின் சதியா..?

Advertisements
யார் இந்த அஜித் பவார்… எப்படி இந்த விபத்து நிகழ்ந்தது..இந்த விமான விபத்தில் சந்தேகம் இருக்கிறது என்று  பரபரப்பை கிளப்பிய மம்தா பானர்ஜி..! இது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்….

மகாரஸ்டிர துணை முதல்வர் அஜித்பவார் இன்று மகராஸ்டிர மாநிலம் பாரமதியில் நடந்த  விமான விபத்தில் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஸ்டிரத்தில் அதிக முறை துணை முதல்வராக பணியாற்றியவரும் இவர் தான்…

1959ம் ஆண்டு மகராஸ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம்  தேவ்லாலி (Deolali ) என்ற கிராமத்தில் பிறந்தவர். தந்தை ஆனந்த்ராவ்  மும்பை ராஜ்கமல் ஸ்டுடியோவில் பணி புரிந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், 10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்ல தொடங்கினார்.  குடும்ப பாரத்தையும் சுமக்க வேண்டி நிலைக்குத் தள்ளப்பட்டார்.

1982ம் ஆண்டு காலக்கட்டத்தில் அஜித் பவாரின் சித்தப்பா சரத்பவார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார்.

இந்த காலக்கட்டத்தில் சித்தப்பாவின் கரங்களை பற்றிக் கொண்டு அரசியலுக்குள் நுழைந்தார் அஜித் பவார். முதன்முதலில், தனது 23 வயதில் கூட்டறவு சர்க்கரை ஆலை தலைவரானார்.

1991ஆம் ஆண்டு பாராமதி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சமயத்தில் மத்தியில்  பி. வி. நரசிம்ம ராவ் அரசு பொறுப்பேற்றபோது, முதலமைச்சராக இருந்த சரத்பவார் பதவியை விட்டு விலகி,  மத்திய பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார். இதனால்,  தனது சித்தப்பா சரத்பவார் பாரமதி மக்களவைக்கு தொகுதியில் போட்டியிட வசதியாக தனது மக்களவை உறுப்பினர் பதவியை அஜித்பவார்  ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து,  1991 ம் ஆண்டு  முதல் 2024ம் ஆண்டு வரை பாரமதி சட்டமன்ற தொகுதியிலேயே தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். மகராஸ்டிர மாநிலத்தில் பல்வேறு அமைச்சர் பதவியிலும் இருந்தார்.  1999ம் ஆண்டு சரத்பவார் காங்கிரசில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அஜித் பவாரும் சித்தப்பாவை தொடர்ந்து, சென்றார்.
1999 ம் ஆண்டு  மகராஸ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து  கூட்டணி ஆட்சியைப் அமைத்த போது,   மகராஸ்டிர மாநில நீர்ப்பாசனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.பின்பு 2004ம் ஆண்டு  இதே கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தபோது நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதவியை வகித்தார்.  2014 இந்த கூட்டணி ஆட்சியை இழக்கும் வரையில் அஜித் பவார் மகாரஸ்டிரத்தில் அமைச்சராக இருந்தார்.

தொடர்ந்து, 2019ம் ஆண்டு மகராஸ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி மற்றொரு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். சரத்பவார் கட்சியின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால், கட்சியையும் கைப்பற்றிக் கொண்டார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து துணை முதல்வவரானார். பின்னர், மீண்டும் சித்தப்பாவுடன் அஜித்பவார் சேர்ந்தார். தொடர்ந்து 2023 ஜூலை மாதம் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பிரிந்து சென்று, மீண்டும் ஏக்நாத் ஷிண்டே – தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணியில்  இணைந்து மகராஸ்டிர மாநில துணை முதலமைச்சரானார்இந்த நிலையில்தான் , இன்று விமான விபத்தில் பலியாகியுள்ளார்.

இதற்க்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்… இந்நிலையில், மும்பையில் இருந்து பாரமதிக்கு வி.எஸ்.ஆர் Learjet 45 என்ற விமானத்தில் பயணித்த போது, இந்த விபத்து நடந்துள்ளது. விமானத்தில் இருந்த பைலட், உதவியாளர்கள் உள்ளிட்ட 6 பேருமே இறந்து போனார்கள்.

காலை 8.10 மணிக்கு மும்பை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 9.10 மணிக்கு பாரமதி விமான நிலையத்தில் இறங்க முற்பட்ட போது, விபத்து நடந்துள்ளது.டெக்னிக்கல் பிரச்னை காரணமாகவே விபத்து நடந்தாக கூறப்படுகிறது. ரன்வேயில் இறங்க முற்பட்ட போது, அருகிலுள்ள விவசாய நிலத்தில் விமானம் பெல்லி லேண்டிங் செய்ததாகவும் அப்போது, வெடித்து சிதறியதாகவும் தகவல் உள்ளது.

இந்த விபத்துக்கு டெக்னிக்கல் கோளாறு காரணமா? அல்லது சதியா ?  என்று முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரிய வருமென்று உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 1998ம் ஆண்டு முதல் Learjet 45 ரக மிடில் சைஸ் விமானங்கள் தயாரிக்கப்பட்டன. 2007ம் ஆண்டு உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதில், 8 பேர் வரை தாராளமாக பயணிக்கலாம். விபத்தில் சிக்கிய விமானம் 16 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.

அரசியலில் அதிரடியாக செயல்பட்டு, மகாராஷ்டிர மாநில வரலாற்றிலேயே 6 முறை  துணை முதலமைச்சராகப் பதவியேற்றவர் என்ற பெருமை கொண்ட அஜித் பவாரின் திடீர் மறைவு அரசியலில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .அஜித்பவாருக்கு  சுநேத்ரா என்ற மனைவியும் பார்த்த் பவார் ,  ஜெய் பவார் என இரு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விபத்தில் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறியாக இருப்பது கவலையளிக்கிறது.

குறிப்பாக, ஆளும் கட்சியில் இருந்த ஒருவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன என்ற அச்சம் எழுகிறது. அஜித் பவார் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி, மீண்டும் தனது தாய் கட்சிக்கே திரும்பப் போகிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால், இந்தச் விபத்தில் ஐயம் எழுகிறது.

எனவே, இந்த விபத்து குறித்து மற்ற அரசு விசாரணை அமைப்புகளை விட, உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது. மற்ற விசாரணை அமைப்புகள் தங்களின் சுதந்திரத்தை இழந்துவிட்டன. எனவே, வேறு எந்த அமைப்பின் மீதும் இல்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மம்தா பானர்ஜி மட்டுமில்லாமல், காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ், வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட பலரும் முறையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *