Ayodhya Ram Mandir Inauguration 2024: ஜனவரி 22 – ஆம் தேதி பொது விடுமுறை!

அயோத்தியில் உள்ள ராமர் கோவில் திறப்பு விழா, வரும் ஜனவரி – 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி பொது விடுமுறை அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ஆம் நாள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இராமர் கோயில் கட்ட பூமிபூசை நடத்தப்பட்டது; மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டது.

மூன்று நடைமேடைகளுடன் அமைந்த அயோத்தி தொடருந்து சந்திப்பு நிலையம் கோரக்பூர், கான்பூர், லக்னோ, அலகாபாத், வாரணாசி, பாட்னா, ஆசான்சோல், கொல்கத்தா, கவுகாத்தி, அமிர்தசரஸ், மும்பை, தில்லி, சென்னை, அகமதாபாத் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

அயோத்தியில் மகரிஷி வால்மீகி விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.மேலும் ரயில் நிலையமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவைக் காண பொதுமக்களை அனுமதிக்க வரும் 22 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்க கோரி மகாராஷ்டிர முதல்-அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பாஜக கண்டிவாலி தொகுதி எம்.எல்.ஏ. அதுல் பட்கல்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *