தமிழத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.
தமிழகத்தில் முதலில் 7-ந்தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த கனமழையால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி தொடங்கப்பட்டது.
மழை நின்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதையொட்டி, கடந்த 18-ந்தேதி தென்மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டும் சில பாடங்களுக்கு தேர்வுகள் நடத்த முடியாமல் போனது.
தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.
அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. வரலாறு காணாத வெள்ளம் பாதித்த திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு வருகிற 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை விடுப்பட்ட அரையாண்டு தேர்வுகளை நடத்த அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆய்வு செய்தார். மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் நேரில் சென்று மேற்பார்வை செய்து வருகின்றனர்.
