
கன்னட சினிமாவில் பல படங்கள் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான கேஜிஎப் படம் வசூல் ரீதியாகவும் , வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது .
அந்த வகையில் 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் ‘காந்தாரா’. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான ‘காந்தாரா சாப்டர்1′ கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
இந்நிலையில்,’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் தேதி குறித்து படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த் நடிப்பில் வெளியாகி உலகெங்கும் வசூல் வேட்டை செய்து வரும் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் அக்.31ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது.


