Ayalaan Movie: 5 நாளில் 50கோடி வசூல்!

Advertisements

அயலான் திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதுவரை உலக அளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இதனைப் படக்குழு போஸ்டரைப் பகிர்ந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

“சென்னை:”ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அயலான் திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ‘அயலான்’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘அயலான்’ திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இதனைப் படக்குழு போஸ்டரைப் பகிர்ந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *