Bangladesh issue:அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!

வங்காளதேச நாட்டிலிருந்து தப்பியோடிய ஷேக் ஹசீனா, தற்போதைக்கு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

புதுடெல்லி:வங்காளதேசத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியாவுக்கு வந்த ஷேக் ஹசீனா, இங்கிலாந்தில் அடைக்கலம் கோரியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் அடைக்கலம் புகுவதற்கான அனுமதி கிடைக்கும் வரை ஷேக் ஹசீனா, இந்தியாவிலேயே தங்கியிருக்கலாமெனச் சொல்லப்படுகிறது. இதனால், ஷேக் ஹசீனா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது இந்தியாவும் உயர் மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

வங்கதேச விவகாரம்குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. சற்று நேரத்தில் தொடங்க உள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வங்க தேச விவகாரம்குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எடுத்துரைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *