தேர்தலில் விளம்பரங்களுக்கு முன்கூட்டிச் சான்று பெற தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

Advertisements

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் விளம்பரங்களை முன்கூட்டிக் காட்டிச் சான்று பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகாரில் நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் ஆறு மாநிலங்களில் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14ஆம் நாள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தலையொட்டிச் சமூக ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றில் வெளியிடும் விளம்பரங்களை முன்கூட்டியே ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் காட்டிச் சான்றுபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விளம்பரம் வெளியிடும் நாளுக்கு முன்னரே இதற்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *