
உலக நாடுகளுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய எம்.பிக்கள் குழுவினர், பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க, காங்கிரசின் சசிதரூர் தலைமியிலான எம்.பி.க்கள் கூட்டம் பல்வேறு நாடுகளுக்கு சென்றது. இந்நிலையில், உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பி.க்கள் குழுவினரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து
அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவினர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது உலக நாடுகளுக்குச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களை பிரதமருன் பகிர்ந்து கொண்டனர்.



