Bihar : இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம்..!

பீகாரில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

பீகாரில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள 122 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது. இதை தொடர்ந்து, நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் 14 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

இதை அடுத்து, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு 35 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரோதஸ் மாவட்டத்தில் கராகட் தொகுதியில் பிரசாரம் செய்த அவருக்கு கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பிறந்தநாள் வாழ்த்துடன் வரவேற்றனர்.

இதை தொடர்ந்து, மேடையிலேயே கேக் வெட்டி மக்களுடன் தனது பிறந்தநாளை தேஜஸ்வி கொண்டாடினார். அப்போது தேஜஸ்வி யாதவ் பேசியபோது, ‘‘வருகின்ற 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு விரைவில் ஆட்சி அமைப்போம் என்றும் அப்போது உங்கள் அனைவருக்கும் தனது பதில் பரிசுகள் கிடைக்கும் என வாக்குறுதி தருவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *