குறைந்த ஊதியம் வாங்குபவர்களுக்கு 2,000 டாலர் வழங்க டிரம்ப் உத்தரவு.!

அமெரிக்காவில் குறைந்த ஊதியம் வாங்கும் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தவணையாக 2,000 டாலர் வழங்கப்படும் என அமேரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீது அதிக வரி விதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்நிலையில், இந்த வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை குடிமக்களுக்கு பிரித்துக் கொடுக்க உத்தேசித்துள்ளதாக ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இது குறித்து டிரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். இதில், தற்போது உலகிலேயே மதிப்புக்குரிய நாடு என்றும் பெரும் அளவில் பங்குச் சந்தை மதிப்பீடு கொண்ட நாடாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அமெரிக்கக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தவணையாக 2,000 டாலர் வழங்கப்படும் என்றும் அதேசமயம், இந்த நிதி அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறுபவர்களுக்குக் கிடைக்காது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பால் அமெரிக்கர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *