Donald Trump : மீண்டும் அமெரிக்க அதிபராகும் டிரம்ப்

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் தேர்வு என ஃபாக்ஸ் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டோனால்ட் டிரம்ப் 51% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 538 எலெக்டோரல் வாக்குகளில், 277 வாக்குகளை டிரம்ப் பெற்றார். மெஜாரிட்டிக்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், டிரம்ப் தற்போது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். டோனால்ட் டிரம்ப் வெற்றி எதிரொலியாக சர்வதேச பங்குசந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.கடந்த 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்விக்கண்ட பின்னர் மீண்டும் தற்போது போட்டியிட்டு அதிபராக தேர்வாகி உள்ளது வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது. 1800ஆம் ஆண்டில் அதிபரான க்ரோவர் கிளீவ்லேண்டிற்கு பிறகு ஒரு தேர்தலில் தோல்விக்குப் பிறகு மீண்டும் பதவிக்கு வந்த முதல் அதிபர் என்ற பெருமையை டிரம்ப் பெற்றார். தற்போது அமெரிக்க ஊடகங்கள் அதிபர் தேர்தலில் டோனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அதிபராக டோனால்ட் டிரம்ப் தேர்வான நிலையில், துணை அதிபராக ஜே.டி. வேன்ஸ் தேர்வானார். தொடர்ந்து, டோனால்ட் டிரம்ப் அவரது வெற்றிக்கு பின் புளோரிடா நகரில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் தனது உரையில், “அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன், பிரச்னைகளை தீர்ப்பேன். எனது ஆட்சிக்காலம் அமெரிக்க வரலாற்றில் பொற்காலமாக அமையப்போகிறது. அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் அளவிற்கு ஆட்சி நடத்திவேன். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெற்றி கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *