3 நாட்களில் 183 கோடி வசூலித்து மிரட்டும் ‘தி ராஜாசாப்’!

Advertisements

பிரபல நடிகர் பிரபாஸ் நடித்த ராஜாசாப் திரைப்படம் மூன்று நாட்களில் 183 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மாருதி இயக்கத்தில் பிரபல நடிகர் பிரபாஸ் ‘தி ராஜாசாப்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில், பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக திகில் காட்சிகள் நிறைந்த படமாக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தி ராஜா சாப் படம் வெளியாகி இன்றுடன் மூன்று நாட்கள் ஆன நிலையில், படத்தின் வசூல் நிலவரம் குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில், ராஜா சாப் படம் உலகளவில் 183 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது எனக் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *