
வெள்ளை மாளிகைக்கு வருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதனை வெள்ளை மாளிகை அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அடுத்த வாரம் அதிபர் டிரம்ப்-ஐ வெள்ளை மாளிகையில் வைத்துச் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்றதும் அவரைச் சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முதல் சர்வதேச தலைவர் பெஞ்சமின் நேதன்யாகு தான் என்று இஸ்ரேல் பிரமதர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபிறகு முதல் முறையாக அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நேதன்யாகு சந்திக்க உள்ளனர்.
முன்னதாகப் போர் நிறுத்தம் தொடர்பாகப் பல மாதங்கள்வரை பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.
முன்னதாக இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தேவையான கருவிகளை வழங்கியதற்காக அமெரிக்காவுக்கும் அதன் அதிபர் டொனால்டு டிரம்பிற்கும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்து இருந்தார்.
