Athangotasan: அதங்கோட்டாசான் நினைவிடத்தில் மரியாதை!

Advertisements

கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோட்டில் தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசான் நினைவுவிழாவை யொட்டி பத்பநாபபுரம் சார் ஆட்சியர் மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கி.மு-7-ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு திசையில், வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு, மருவி தற்போது, விளவங்கோடு என்றழைக்கப்படும் பகுதி அருகே  மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு எனும் கிராமத்தில் பிறந்த பழம்பெரும்புலவர் அதங்கோட்டாசான்.

அப்போதைய பாண்டிய மன்னர்கள் அரசவையில் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த கபாடபுரத்தில் உள்ள தமிழ் சங்கத்தில் இணைந்து தமிழ் பணி ஆற்றினார்கள். குறிப்பாக, தமிழ் இலக்கியங்களில் ஒன்றான தொல்காப்பியத்தை வளர்த்து, அன்றைய அரசவையில் தமிழ் கவிஞராகவும் விளங்கினார்  மேலும், அகத்திய முனிவரின்  முக்கியமான  12-சீடர்களில் தலைசிறந்த ஒருவராகவும் திகழ்ந்தார்.

மேலும், இவர் பிறந்த ஊரான அதங்கோட்டில் தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும், டிசம்பர் 12-ம் தேதி தமிழக அரசின் சார்பில், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்று  அதங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், அதங்கோட்டாசானின் திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட்,கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் மேலும் சார் ஆட்சியர் கௌசிக்  செய்தியாளர்களிடம் கூறுகையில் சேதமடைந்துள்ள அதங்கோட்டாசானின் மணிமண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கபடும்  எனவும் அதங்கோட்டாசான் தொல்காப்பியர் உள்ளிட்ட புலவர்களின் புகழ் மாணவர்களுக்கு தெரியும் விதமான நடவடிக்கைகள் எடுக்கபடும் எனவும் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *