Kodanad case: நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு!

Advertisements

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக உயிரிழந்த டிரைவர் கனகராஜ் சகோதரர் தனபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து விலக்கு கோரி அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் சார்பில் வாதிடப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இ.பி.எஸ்.,க்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இ.பி.எஸ்.,சிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தும் உத்தரவிடப்பட்டது. வழக்கறிஞர் ஆணையரான இவர், சாட்சியப்பதிவை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கோடநாடு: கனகராஜ் சகோதரர் தனபால் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் சாட்சியங்களை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *