Indira Gandhi International Airport: பாரத் பே ஆலோசகர் மற்றும் அவரது மனைவியை தடுத்து நிறுத்திய போலீஸ்!

Advertisements

பாரத் பே ஆலோசகர் அஷ்னீர் குரோவர் அவரது மனைவி மாதுரி ஜெயின்  இருவருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு  படை டில்லி நீதிமன்றத்தில் நவம்பர்-21  அன்று ஆஜாராகுமாறு   சம்மன் அனுப்பிய நிலையில் அவர்கள் டில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான பாரத் பே  வின் நிர்வாக ஆலோசகராக ஆஷிர் க்ரோவர் இருந்தபோது மற்றும் அவரது மனைவி மாதுரி ஜெயின் இருவரிடமும் 81 கோடி ரூபாய் ஊழல் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு  குறித்து விசாரிக்க ஃபிண்டெக் மற்றும் காவல்துறை நவம்பர் 21-ஆம் தேதி  ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதனால் இருவரும் மண்டி மர்க் அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில் இருவரும் நியூயார்க் செல்வதற்காக டில்லி விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இருவர் மீதும் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் நவம்பர் 7 -ஆம் தேதி எப் ஐ ஆர் பதிவு செய்த பிறகு அவர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்வது தவறு. குரோவரும் அவரது குடும்பத்தினரும் போலி மனிதவள ஆலோசகர்களுக்கு முறைகேடாக பணம் அளித்தல், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய விற்பனையாளர்கள் மூலம் அதிகப்படியான மற்றும் தேவையற்ற காரணங்களுக்காக பணம் கொடுத்தது, உள்ளீட்டு வரி வரவு மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு அபராதம் செலுத்துதல், டிராவல் ஏஜென்சிகளுக்கு சட்டவிரோதமாக பணம் செலுத்துதல், மாதுரி ஜெயின் போலி விலைப்பட்டியல்கள் மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகியவற்றின் மூலம் சுமார் ரூ .81.30 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக ஹரத்பே குற்றம் சாட்டினார். இக் குற்றத்தில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த சுரேஷ் ஜெயின், ஷ்வெட்னக் ஜெயின் ஆகியோரும் ஈடுபட்டது தெரிய  வந்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறைந்தது 10 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். டிசம்பர் 22- ஆம் தேதி பாரத் பே இவர்கள் குடும்பத்தார் மீது 88.67 கோடி  நஷ்டம் ஏற்படுத்தி ஏமாற்றி பணத்தை கையாடல் செய்துள்ளதாக  தொடர்ந்த வழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *