Assembly Elections 2023: நான்கு மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை..!

Advertisements

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாளை டிசம்பர் 3- ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மிசோரம் மாநிலத்தில் மட்டும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று வாக்கு எண்ணிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில்  கிறிஸ்தவர்கள் அதிகம் பேர் வாழ்வதால் ஞாயிற்றுக் கிழமை மக்கள் தேவாலயங்களுக்கு செல்வர் என்பதாலும் , அன்று புனித நாளாக கருதப்படுவதால் அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உட்பட, சமூக அமைப்புகள் பலமாக கோரிக்கை வைத்தனர்.

அதனால் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று போராட்டங்கள் நடத்திய நிலையில், தேர்தல் ஆணையம்  அவர்களது கோரிக்கையை ஏற்று வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிட ஒப்புக்கொண்டுள்ளது தேர்தல் ஆணையம்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால்  ஐந்து  மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *