Sweet Potato Poli: சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி!

மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற பல வகை கிழங்கு வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் பரவலாக விரும்பி சாப்பிடப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு. ஏழைகளின்  உணவாக பயன்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் பயன்கள்  ஏராளம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு மிகச் சரியான தீர்வு  சர்க்கரைவள்ளிக் கிழங்கு.   கொழுப்பு என்பது அறவே இல்லை. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு தாராளமாக சாப்பிடலாம்.
இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து எப்படி போளி தயாரிப்பது என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்;

சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 1/2 கிலோ
மைதா -1/2 கிலோ
வெள்ளம்-1/2 கிலோ
ஏலக்காய்-2
தேங்காய்த்துருவல்-  1/2 கப்
உப்பு- தேவையான அளவு

செய்முறை;

மைதாவை நன்கு இலகுவாக பிசைந்து கொள்ளவேண்டும். கையில் ஒட்டாமல் இருக்குமாறு எண்ணெய்விட்டு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவு குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு நன்றாக கழுவி வேக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தோலை நீக்கி வெள்ளம் சேர்த்து நன்றாக பிசைந்து ஏலக்காய் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்க்கவேண்டும். மைதா மாவை உருண்டைகளாக உருட்டி நன்றாக வட்ட வடிவில் தட்டி அதில் வள்ளிக்கிழங்கு கலவையை வைத்து மூடி மீண்டும் தட்டி தவாவில் போட்டு எடுத்து சுட சுட பரிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *